சினிமா செய்திகள்

விக்ரம் வேதா

null

ஹிருத்திக் ரோஷன் இந்தியாவில் படப்பிடிப்புக்கு வர மறுத்தாரா? - விக்ரம் வேதா படக்குழு விளக்கம்

Update: 2022-07-05 06:14 GMT
  • விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
  • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுது.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

விக்ரம் - வேதா 

இப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்காக உத்தரப்பிரதேசத்திற்கு வர ஹிருத்திக் ரோஷன் மறுத்ததாகவும், இதனால் துபாயில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியதால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக இணையத்தில் செய்திகள் வெளியானது.

வேதா - விக்ரம் 

இந்நிலையில் இது குறித்து வெளியான வதந்திகளுக்கு படக்குழு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'விக்ரம் வேதா' படப்பிடிப்பு தொடர்பாக இணையத்தில் பரவிய செய்திகள் போலியானவை. இப்படம் இந்தியாவில் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் தான் அதிகளவில் படமாக்கப்பட்டுள்ளது. விக்ரம் வேதா படத்தின் ஒரு பகுதி மட்டும், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அமீரகத்தில் படமாக்கப்பட்டது. துபாயில் நடத்தியதற்கு காரணம், அங்கு தான் பயோ பபுளுடன் பணியாட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தும் சூழலுக்கு அனுமதி கிடைத்து. அத்துடன் படக்குழுவினரின் உடல் நலம் கருதியும் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News