சினிமா செய்திகள்

விஜய் யேசுதாஸ்

null

விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு - பொய் புகார் அளிக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை

Published On 2023-06-12 06:40 GMT   |   Update On 2023-06-12 06:43 GMT
  • பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமானதாக அவரது மனைவி சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகாரளித்தார்.
  • இந்த விவகாரத்தில் வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் போலீசார் விசாரனை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது.

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் 30-ஆம் தேதி புகாரளித்தார்.

அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.


விஜய் யேசுதாஸ்

இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பணியாட்கள் ஒன்பது பேரிடம் இதுவரை விசாரணையும் நடைபெற்றது.

இந்நிலையில், விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் போலீசார் விசாரனை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது. விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை அவரை போலீசார் தொடர்பு கொண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் விசாரணைக்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.


விஜய் யேசுதாஸ்

நகைகள் வைக்கப்பட்டிருந்த நம்பர் பதிவிடக்குடிய லாக்கர் உடைக்கப்படவில்லை, லாக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரின் மனைவிக்கு மட்டுமே தெரியும் எனவும் 40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகிக்கின்றனர். விளக்கம் கேட்டபோது விஜய் யேசுதாஸின் குடும்பத்தினர் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் சந்தேகத்தின் பேரில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் என போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Tags:    

Similar News