சினிமா செய்திகள்

தி வாரியர்

null

வெளியானது தி வாரியர் படத்தின் டிரைலர்

Update: 2022-07-02 09:59 GMT
  • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி வாரியர்.
  • இந்த படத்தில் ராம் பொத்னேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தற்போது லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் தி வாரியர்.

இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கீர்த்தி ஷெட்டி, ஆதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


தி வாரியர்

தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சிம்பு பாடிய புல்லட் மற்றும் விசில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தி வாரியர் படத்திற்கு இயக்குனர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Full View


Tags:    

Similar News