சினிமா செய்திகள்

துணிவு - அஜித்

இணையத்தில் கசிந்த அஜித்தின் துணிவு பட பாடல்.. அதிர்ச்சியில் படக்குழு

Published On 2022-12-08 09:40 IST   |   Update On 2022-12-08 09:40:00 IST
  • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துள்ள படம் துணிவு.
  • இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. இதில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று உள்ளன. துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' என்று தொடங்கும் பாடல் நாளை (9-ந் தேதி) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அனிருத் பாடி இருந்த இந்த பாடலை ரசிகர்கள் கேட்க ஆர்வமாக இருந்தனர்.

 

துணிவு - அஜித்

இந்நிலையில் 'சில்லா சில்லா' பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது. சில்லா சில்லா பாடலை பகிரவேண்டாம் என்று படக்குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News