சினிமா செய்திகள்

சௌந்தரராஜா 

null

சிறந்த மனிதநேய விருதை பெற்றார் நடிகர் சௌந்தரராஜா

Published On 2022-09-07 09:11 GMT   |   Update On 2022-09-07 09:14 GMT
  • நடிகர் சௌந்தரராஜா பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • இவருக்கு சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சௌந்தரராஜா 2012-ஆம் ஆண்டு மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியான 'வேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் சுந்தரபாண்டியன், தெறி, பிகில் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.


சௌந்தரராஜா 

இதையடுத்து நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடுப்படுத்தி கொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் (துணை போலீஸ் இயக்குனர் - மலேசியா ராயல் போலீஸ்) மற்றும் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், டேக்கேர் இன்டர்நேஷனல் நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.


சௌந்தரராஜா 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சௌந்தரராஜா, "நான் செய்வது சேவை அல்ல கடமை. மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்கிறேன்" என்று பேசினார்.

Tags:    

Similar News