சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு

'சொப்பன சுந்தரிய இவங்க தான் வச்சிருக்காங்க'.. இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்ட ப்ரோமோ..

Published On 2022-09-05 18:59 IST   |   Update On 2022-09-05 18:59:00 IST
  • இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

'சுழல்' வெப் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'டிரைவர் ஜமுனா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


சொப்பன சுந்தரி ப்ரோமோ

இதையடுத்து தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் இந்த படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று (05-09-2022) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 'சொப்பன சுந்தரி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு "மக்களே சொப்பன சுந்தரிய இவங்கதான் வச்சிருக்காங்க" என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



Tags:    

Similar News