சினிமா செய்திகள்

விஜய் யேசுதாஸ்

null

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை கொள்ளை.. பணியாளர்களிடம் விசாரணை

Published On 2023-04-05 14:09 IST   |   Update On 2023-04-05 17:02:00 IST
  • பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமானதாக அவரது மனைவி போலீசில் புகாரளித்தார்.
  • இந்த விவகாரம் தொடர்பாக பணியாட்கள் ஒன்பது பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் 30-ஆம் தேதி புகாரளித்தார்.

அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பணியாட்கள் ஒன்பது பேரிடம் இதுவரை விசாரணையும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் இரண்டு பணியாளர்கள் நகை காணாமல் போன மாதத்தில் அவர்களது சொந்த ஊரான நேபால் மற்றும் பீகாருக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News