சினிமா செய்திகள்
null

என்ன மனசுப்பா.. சித்தி இத்னானி வாழ்த்தும் ரசிகர்கள்

Published On 2023-06-23 12:41 GMT   |   Update On 2023-06-23 13:13 GMT
  • 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி .
  • இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து ஆர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்த 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.


சித்தி இத்னானி அடிக்கடி முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் மனநலம் குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.


இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சித்தி இத்னானி, "நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம் உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் எனது மதியத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு 'என்ன மனசுப்பா' என்று ரசிகர்கள் வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News