சினிமா செய்திகள்

கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா

நடிகை கியாரா அத்வானியை கரம் பிடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா

Update: 2023-02-08 06:56 GMT
  • நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் காதலித்து வந்தனர்.
  • இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்றது.

கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.


கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா

இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டினார். இந்நிலையில், காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.


கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா

ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கியாரா, "எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுளளார்.


Tags:    

Similar News