சினிமா செய்திகள்

ஜவான்

null

பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட ஜவான்?

Update: 2022-07-02 06:18 GMT
  • பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜவான்.
  • ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


ஷாருக்கான்

இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜவான் திரைப்படத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று பெரும் தொகை கொடுத்து வாங்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடி-க்கு கொடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இதனை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ. 120 கோடி கொடுத்து வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News