சினிமா செய்திகள்

இளையராஜா - சீனுராமசாமி

இதில் இளையராஜா கலந்து கொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன் - சீனுராமசாமி வேண்டுகோள்

Published On 2023-03-04 05:30 GMT   |   Update On 2023-03-04 05:30 GMT
  • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.
  • இப்படம் ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.


மாமனிதன்

யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சமீபத்தில் இப்படம் 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றது. இதையடுத்து 56-வது ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 25 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இதில் 'மாமனிதன்' திரைப்படம் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


மாமனிதன்

மேலும், அந்த பதிவில், "இதில் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன் Golden Globe Award விட வயதில் மூத்த திரைப்பட விழா. பண்ணைப்புரத்தில் அவர் ஜனித்த இடத்தில் எடுத்தப் படம் என்பதாலும் அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடல் நான் இருப்பதனால் Meastro கலந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News