சினிமா செய்திகள்

சினேகன்

வெற்றிமாறன் கூறியது அவரின் கருத்து.. பாடலாசிரியர் சினேகன் பேட்டி..

Published On 2022-10-13 10:47 GMT   |   Update On 2022-10-13 10:47 GMT
  • தொல். திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சினேகன் கலந்து கொண்டார்.
  • இவர் வெற்றிமாறனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி உறுப்பினர்கள் 60 நாள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதையடுத்து 50-வது நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கனிகா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


கனிகா - சினேகன்

நிகழ்ச்சியை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த சினேகன், "நல்ல கலைஞன் எந்த பிரிவினைகளுக்கும் அகப்படமாட்டான். அரசியலை சினிமாவாகவும் சினிமாவை அரசியலாகவும் பார்க்காத வரைக்கும் கலைஞன் கலைஞனாக இருந்தால் எந்த கலைஞனையும் பிரிவினைவாதத்திற்குள் கொண்டு போக முடியாது" என்று கூறினார்.


சினேகன்

மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "ஆரம்பத்திலேயே காஞ்சி பெரியவர் மற்றும் எழுத்தாளர் சோ ஆகியோர் கூறிய கருத்து தான் அவை. அந்த காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. அதன்பின் பண்பட்ட ஒரு பண்பாடு இங்கு சேர்ந்து அதற்கு பெயர் வைத்தார்கள் என்று அவர் படித்ததை அவர் கூறினார். அது அவருடைய கருத்து" என்று கூறினார். 

Tags:    

Similar News