சினிமா செய்திகள்

ஒற்று

சர்வதேச விருதுகளை பெற்ற "ஒற்று" திரைப்படம்

Update: 2022-07-05 10:31 GMT
  • மதிவாணன் சக்தி வேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஒற்று.
  • இந்த திரைப்படம் ஜூலை 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மகா மகா, நுண்ணுணர்வு போன்ற படங்களை இயக்கியவர் மதிவாணன் சக்திவேல். இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் "ஒற்று" . இந்த படத்தில் மஹாஸ்ரீ, இந்திரா, தினேஷ், மண்டேஸ் ரமேஷ், டான் சிவகுமார், உமா மகேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு நாவல் எழுதும் எழுத்தாளர் பார்வையற்ற பெண்ணை சந்திக்கிறார். எழுத்தாளர் தனது அடுத்த நாவலுக்கு பார்வையற்ற பெண்ணின் தனிப்பட்ட கதையைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.


ஒற்று

இறுதியில் அவர் ஒரு பரபரப்பான தொடர்பை வெளிப்படுத்துவதை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு எஸ்.பி.வெங்கடேஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். மேலும் சுரேஷ் உர்ஸ் படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


ஒற்று 

இந்தியப் பின்னணியில் இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் படமாகியுள்ள "ஒற்று" திரைப்படம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. மேலும், இப்படம் ஜூலை 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags:    

Similar News