கேரள ரசிகர்களுக்கு மலையாளத்தில் நன்றி சொன்ன விஜய் - வைரலாகும் எக்ஸ் பதிவு
- இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பட்டையை கிளப்பியது. லியோ பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன்பு கேரளா வந்த நடிகர் விஜய்-க்கு அம்மாநில ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் படப்பிடிப்பு தளம் மற்றும் விஜய் தங்கியிருக்கும் இடங்களில் தினந்தோரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.
ரசிகர்கள் வருகையை அடுத்து நடிகர் விஜய், அவர்களை சந்தித்து வந்தார். ரசிகர்கள் விஜய்க்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், கேரள ரசிகர்களுக்காக நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மலையாளிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை எக்ஸ் பதிவில் இணைத்துள்ளார்.
இந்த பதிவில், "எனது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள்! எல்லா மலையாளிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.