சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதன்

null

என்னை விட்டு நீ போனாலும்.. கோமாளி பட இயக்குனரின் இரண்டாவது பாடல்..

Update: 2022-08-13 07:44 GMT
  • கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன்.
  • இவரின் அடுத்த படத்திற்கு லவ் டுடே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை பெற்றது.


லவ் டுடே

இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியுள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, லவ் டுடே படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் சோகமான பாடலாக உருவாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Full View


Tags:    

Similar News