சினிமா செய்திகள்
null

'எல்.ஜி.எம்' திரைப்படம்.. சிறப்பு தோற்றத்தில் தோனி

Published On 2023-07-21 11:20 GMT   |   Update On 2023-07-21 11:20 GMT
  • டோனி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எல்.ஜி.எம்'.
  • இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.




காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். 'எல்.ஜி.எம்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




இந்நிலையில், 'எல்.ஜி.எம்' சிறப்பு தோற்றத்தில் தோனி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தோனியும் நடித்துள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News