சினிமா செய்திகள்

சமந்தா - நாக சைதன்யா

null

சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்.. எதிர்பாராத பதிலளித்த நாகசைதன்யா..

Update: 2022-08-10 12:45 GMT
  • நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • இவர்கள் கடந்த ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.


சமந்தா - நாக சைதன்யா

இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா ஒரு ஹாய் சொல்லிவிட்டு, கட்டிப்பிடிப்பேன் என்று பேசியுள்ளார்.

மேலும், அவர் கையில் இருக்கும் டாட்டூ பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அது தன் திருமண நாள் என்றும்  அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Tags:    

Similar News