சினிமா செய்திகள்

கங்கனா ரணாவத்

null

சல்மான் ருஷ்டிக்கு கத்திக் குத்து.. நடிகை கங்கனா ரணாவத் கண்டனம்..

Published On 2022-08-13 12:42 GMT   |   Update On 2022-08-13 12:50 GMT
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
  • நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. இவர் கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபல எழுத்தாளராகிய இவர் எழுதிய, "சாத்தானின் வேதங்கள்' என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன.


சல்மான் ருஷ்டி

இதையடுத்து சல்மான் ருஷ்டி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கண் பார்வையை ருஷ்டி இழக்க நேரிட்டுள்ளது என அவரது புத்தகத்தின் ஏஜெண்ட்டு தெரிவித்துள்ளார்.


கங்கனா ரணாவத்

இந்நிலையில் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். "சாத்தானின் வேதங்கள்" அந்த காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் இருப்பதாகக் கூறிய செய்திக் கட்டுரையின் புகைப்படத்தையும்  தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News