சினிமா செய்திகள்

சக்கீர் மடத்தில்- ஜெயிலர் 

null

தமிழ் சினிமாவால் மலையாள சினிமா மூச்சு திணறுகிறது.. ஜெயிலர் இயக்குனர் திடீர் போராட்டம்

Published On 2023-08-03 09:00 GMT   |   Update On 2023-08-03 09:42 GMT
  • ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
  • இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


ஜெயிலர்

இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதையடுத்து இதே தலைப்பில் இதே நாளில் மலையாள 'ஜெயிலர்'படமும் வெளியாகவுள்ளது. அதாவது, தமிழில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், இதே தலைப்பில் தான் படம் இயக்கியுள்ளதாகவும், ரஜினியின் பட தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் மலையாள சினிமா சேம்பரில் இயக்குனர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருந்தார். எனினும், தலைப்பு மாற்றப்படாத நிலையில், சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள 'ஜெயிலர்' படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.


சக்கீர் மடத்தில் 

இதையடுத்து ஜெயிலர்' படத்துக்குக் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மலையாள ஜெயிலர் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சக்கீர் மடத்தில், கேரள பிலிம் சேம்பர் அலுவலக வாயிலில் தனியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், கேரளாவில் தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால், மலையாள சினிமா மூச்சுத் திணறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News