சினிமா செய்திகள்
ஜி.வி. பிரகாஷ்
பட்டக், பட்டக்.. இணையத்தை கலக்கும் ஜி.வி.பிரகாஷ் பாடல்..
- ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
- இவரின் புதிய மியூசிக் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'வணங்கான்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ்
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. ஒரு நிமிட மியூசிக் வீடியோவாக உருவாகியுள்ள இந்த பாடல் ஜி.வி. பிரகாஷ் குரலில் மிகவும் துள்ளலான இசையுடன் சமூக வலைதளத்தை ஆகிரமித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.