சினிமா செய்திகள்
null

தன் செயல்கள் மூலம் நிஜ கதாநாயகனான விஜய்.. பிரபல தயாரிப்பாளர் பதிவு

Published On 2023-07-13 06:29 GMT   |   Update On 2023-07-13 06:54 GMT
  • விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
  • விஜய்யின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.


இதையடுத்து மாணவ- மாணவியர்களின் கல்விக்கு உதவும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


சுரேஷ் காமாட்சி- விஜய்

இந்நிலையில், 'மாநாடு' போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய்யை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்... மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது. அப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன் விஜய் அவர்கள் இரவுப் பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தளைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.




Tags:    

Similar News