சினிமா செய்திகள்

தனுஷ் - அருண் மாதேஸ்வரன்

இது எப்போ? வதந்திக்கு பதிலடி கொடுத்த அருண் மாதேஸ்வரன்

Published On 2022-12-22 11:53 IST   |   Update On 2022-12-22 11:53:00 IST
  • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார்.
  • இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது.

 

கேப்டன் மில்லர்

அடுத்து தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார்.

 

ரசிகரின் பதிவு

இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேப்டன் மில்லர் திரைப்படம் சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு தளத்தில் வெளி நபர்களை அனுமதிக்கப்படவில்லை, புகைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சில புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட இயக்குனர் அருண் மாதேஸ்வரன், அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இது எப்போ என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து அவர் பதிவிட்டிருப்பது வதந்தி என்று பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.

Tags:    

Similar News