சினிமா செய்திகள்

தோனி வெளியிடும் எல்ஜிஎம் பட இசை மற்றும் டிரைலர்

Published On 2023-07-09 17:07 IST   |   Update On 2023-07-09 17:07:00 IST
  • இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
  • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.



காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.



இதையடுத்து லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த இசை மற்றும் டிரைலரை தோனி மற்றும் சாக்ஷி தோனி நாளை (10.07.2023) வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News