சினிமா செய்திகள்
திருப்பதியில் மகன்களுடன் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்த தனுஷ்
- தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் இப்படத்திற்காக தனுஷ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வலம் வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனுஷ் தனது இரு மகன்களுடன் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் மொட்டையடித்ததால் கேப்டன் மில்லர் படத்தில் அவருடைய பகுதியை நிறைவு செய்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.