சினிமா செய்திகள்

காபி வித் காதல்

null

இணையத்தை கலக்கும் ஜீவாவின் ரம் பம் பம் பாடல்

Update: 2022-07-01 12:45 GMT
  • சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
  • சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலானது.

அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.


காபி வித் காதல்

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்திலிருந்து ரம் பம் பம் பாடல் இன்று ( ஜூன் 1) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரம் பம் பம் பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

Similar News