சினிமா செய்திகள்

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2022-08-15 05:15 GMT   |   Update On 2022-08-15 05:15 GMT
  • அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள படம் 'ரெண்டகம்'.
  • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். அரவிந்த் சாமி நடிப்பில் 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'நரகாசூரன்', 'கள்ளபார்ட்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 

தற்போது அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்துள்ள 'ரெண்டகம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது.

 

ரெண்டகம்

மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேரளா, கோவா, மங்களூர், மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் 'ரெண்டகம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News