சினிமா செய்திகள்

ரஜினி

null

30 வருட கொண்டாட்டம்... ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனர்

Update: 2022-06-27 07:28 GMT
  • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'அண்ணாமலை'.
  • இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடப்படும் படங்களில் 'அண்ணாமலை' திரைப்படம் இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி - அண்ணாமலை

இந்நிலையில் 'அண்ணாமலை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் 30 வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News