சினிமா செய்திகள்

அனிருத்

null

மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத்.. இவர் தான் ஹீரோ..?

Published On 2022-10-10 17:38 IST   |   Update On 2022-10-10 18:17:00 IST
  • 3, எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அனிருத்.
  • இவர் மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின்னர் எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


அனிருத்

இந்நிலையில், அனிருத் முதன் முறையாக மலையாள படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி இயக்குனர் ஹனீஃப் அடேனி இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அனிருத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News