சினிமா செய்திகள்

டி.டி.எப்.வாசன் படத்தின் அறிமுக பாடலை பாடும் அனிருத்

Published On 2023-07-23 16:01 IST   |   Update On 2023-07-23 16:01:00 IST
  • டி.டி.எப்.வாசன் கதாநாயகனாக நடிக்கும் 'மஞ்சள் வீரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
  • இப்படத்தில் அனிருத் பாடல் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.



இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடிக்கிறார். தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்திற்கு அனிவி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் 'மஞ்சள் வீரன்' படத்தின் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடவுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News