சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ்

படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2022-12-05 11:34 IST   |   Update On 2022-12-05 11:34:00 IST
  • ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
  • இவர் படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் கைவசம் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி படங்கள் உள்ளன.

 

படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை சுட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரசிகர்கள் எனக்கு ஒரு தோசை பார்சல் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News