சினிமா செய்திகள்

பிரியாமணி

தமிழில் நடிகைகளை கவர்ச்சி காட்ட கட்டாயப்படுத்துகிறார்கள்.. நடிகை பிரியாமணி கருத்து

Update: 2022-06-28 11:22 GMT
  • பருத்திவீரன், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியாமணி.
  • தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்தி நடித்துக் வருகிறார்.

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, அதன் மூலம் நிறைய வருமானமும் பிற படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இணையத்தொடர்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அதிக வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியாமணி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழில் நடிகைகளை கவர்ச்சிக் காட்டச் சொல்லி கட்டாயபடுத்துகிறார்கள்.

பாலிவுட் நடிகைகளூக்கு இருக்கும் உடல்வாகு வேறு தமிழ் நடிகைகளின் உடல்வாகுவேறு ஆனால் இந்த நிலை தற்போது மாறியிருக்கிறது என்று பிரியாமணி கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

Tags:    

Similar News