சினிமா செய்திகள்

பிரியா வாரியர்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவரும் பிரியா வாரியர்

Update: 2022-10-06 09:44 GMT
  • 2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
  • இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

பிரியா வாரியர்

 

ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார். பிரியா வாரியார் தொடர்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

பிரியா வாரியர்

இந்நிலையில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கவர்ச்சி உடையில் படகு சவாரி செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Full View

 

Tags:    

Similar News