சினிமா செய்திகள்

பிரியா பவானி சங்கர்

இதை நான் சொல்லவே இல்லை - நடிகை பிரியா பவானி சங்கர் விளக்கம்

Published On 2023-01-19 13:56 IST   |   Update On 2023-01-19 13:56:00 IST
  • தமிழில் 'மேயாத மான்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
  • தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், யானை, மாபியா, ஓமணப்பெண்ணே, மான்ஸ்டர், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


பிரியா பவானி சங்கர்

சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் "சினிமாவிற்கு வரும் போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்று கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன்" என்று கூறியதாக செய்தி வெளியானது.


பிரியா பவானி சங்கர்

இந்நிலையில், இந்த செய்திக்கு விளக்கமளித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாளி கட்டுவாறாம் அப்படிங்கிற மாதிரி இருக்கிறது. ஆரம்பத்தில் நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. மரியாதைக்குரிய மன்றங்கள் கூட நம்பகத் தன்மையைப் பற்றி கவலைப்படாமல் இது மாதிரியான விஷயங்களை முன்னோக்கி கொண்டு செல்கின்றன.


பிரியா பவானி சங்கர் பதிவு

இதை நான் சொல்லவே இல்லை. இதை நான் சொல்லியிருந்தாலும் அதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நான் பணத்திற்காக தான் வேலை செய்கிறேன். எல்லோரும் பணத்திற்காக தான் வேலை செய்கிறார்கள். ஆனால், இது ஒரு நடிகரிடம் இருந்து வரும்போது ஏன் கீழ்தரமாக பார்க்கப்படுகிறது. நான் என் வழியில் முன்னேறி விட்டேன் யாரையும் எளிதாகவும் மலிவாகவும் பேசவிடமாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News