சினிமா செய்திகள்

சூர்யா

ரசிகர்களை சந்தித்த சூர்யா.. வைரலாகும் புகைப்படங்கள்

Published On 2022-10-23 11:15 GMT   |   Update On 2022-10-23 11:15 GMT
  • சூர்யா தற்போது வணங்கான் படத்திலும், வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார்.
  • இதனிடையே சூர்யா ரசிகர்களை சந்தித்துள்ளார்.

சூர்யா படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளதால் அவர் படங்களை அந்தந்த மாநில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு, நல்ல வசூலும் பார்க்கிறார்கள். சூர்யா படங்கள் வெளியாகும் போதெல்லாம் அங்குள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் கொடி, தோரணங்கள் மற்றும் கட்-அவுட்கள் வைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

ரசிகர்களை சந்தித்த சூர்யா

இந்தநிலையில் கர்நாடக ரசிகர்கள் சூர்யாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று கர்நாடக ரசிகர்களை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சூர்யா சந்தித்தார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். ரசிகர்களை சூர்யா சந்தித்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார். சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்திலும் மீண்டும் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News