சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ்

தமிழ் புத்தாண்டை புக் செய்த ராகவா லாரன்ஸ்

Published On 2022-09-27 07:00 GMT   |   Update On 2022-09-27 07:00 GMT
  • ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

ருத்ரன்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ருத்ரன்

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்களது நிறுவனத்தின் வெற்றி படைப்புகளான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா', 'டைரி', வெற்றிப்பட வரிசையில் அடுத்து வருவது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ருத்ரன்' திரைப்படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

பிரியா பவானி சங்கர் - ராகவா லாரன்ஸ் - கதிரேசன்

 

'காஞ்சனா' திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் 'ருத்ரன்' என்பதால், ராகவா லாரன்ஸ் அவர்களின் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை முழு திருப்திப்படுத்தும் விதமாக படத்தின் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

'ருத்ரன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட ஏற்கனவே அறிவிக்க பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால், ராகவா லாரன்ஸ் அவர்களின் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட 'காஞ்சனா' திரைப்படம் வெளியான ஏப்ரல் மாதத்தில் 14.4.2023 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் 'ருத்ரன்' திரைப்படம் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருளுடனும், ரசிகர்கள், மக்கள் ஊடகங்கள் ஆதரவுடன் 'ருத்ரன்' ஏப்ரல் மாதம் வெற்றிவாகை சூட வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

Similar News