சினிமா செய்திகள்
null

அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது

Published On 2023-03-24 06:34 GMT   |   Update On 2023-03-24 06:34 GMT
  • நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
  • இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


இவரது இறுதி ஊர்வலம் சென்னை ஈஞ்சம்ப்பாக்கம் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. தந்தையின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அஜித் குமாரும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். தந்தை உடலை சமந்து செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து நடிகர் அஜித் குமார் சென்றார். 

Tags:    

Similar News