சினிமா செய்திகள்

அமீர்கான்

பட தோல்வியால் ஊதியம் வாங்க மறுத்த நடிகர் அமீர்கான்

Published On 2022-09-01 13:30 GMT   |   Update On 2022-09-01 13:31 GMT
  • அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
  • இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' திரைப்படம் உருவாகியது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.


லால் சிங் சத்தா

அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இதற்கு காரணம்  'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக்  ட்ரெண்டானது தான் என்று கூறப்படுகிறது.


லால் சிங் சத்தா

இந்நிலையில், 'லால் சிங் சத்தா' திரைப்படத்திற்கு நடிகர் அமீர்கான் ஊதியம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, அமீர்கான் தனது நடிப்புக்கான கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்தால், படக்குழுவிற்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை வேண்டாம் என அமீர்கான் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News