சினிமா செய்திகள்

ஜூனியர் என்.டி.ஆர்

அப்டேட் கேட்காதீங்க மன உளைச்சலாகுது - ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர். கோரிக்கை

Update: 2023-02-08 10:05 GMT
  • ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
  • இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர். தற்போது இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு என்.டி.ஆர்.30 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.


ஜூனியர் என்.டி.ஆர்

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆரிடம் அவர் நடிக்கும் 30-வது படம் குறித்து அப்டேட் கேட்டப்போது அவர் கூறியதாவது, "நாங்கள் ஒரு படத்தை உருவாக்கும்போது உண்மையில் அதைப்பற்றி எதையும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் அப்டேட் கொடுத்துக்கொண்டிருப்பது மிகவும் கடினம். உங்களின் ஆர்வம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், அது சில சமயங்களில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அழுத்தத்தை கொடுத்துவிடுகிறது.

அப்படியே அப்டேட்டுகள் கொடுத்தாலும் அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ட்ரோல் செய்கிறீர்கள். அப்படி ஏதேனும் அப்டேட் இருந்தால், அதை எங்கள் மனைவிகளிடம் சொல்வதற்கு முன்பு உங்களிடம் தான் முதலில் தெரிவிப்போம். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள். உறுதியான அப்டேட் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு கொடுப்போம்" என்று பேசினார்.

Tags:    

Similar News