சினிமா செய்திகள்

தனது மகள்களை முதன்முறையாக காண்பித்த சினேகன், கன்னிகா தம்பதி

Published On 2025-05-26 13:44 IST   |   Update On 2025-05-26 13:44:00 IST
  • கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
  • நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கவிதை மற்றும் காதல் என பெயர் சூட்டினார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கவிதை மற்றும் காதல் என பெயர் சூட்டினார்.

இந்நிலையில் முதன் முறையாக சினேகன் - கன்னிகா அவர்களது மகள்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இந்த இணைய உலகத்திற்கு அறிமுக படுத்தியுள்ளனர்.

அவரின் பதிவில் "எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும்.

வணக்கம்..

எங்கள் இரட்டை மகள்கள்

1,காதல் கன்னிகா சினேகன் .

2,கவிதை கன்னிகா சினேகன் .

இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களை நேசிக்கும்

உங்கள் அன்பு..

எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் ..

நன்றி

என்றும் நட்புடன் ..

சினேகன்

கன்னிகா சினேகன்" என கூறியுள்ளார்.



Tags:    

Similar News