சினிமா செய்திகள்

விமர்சனம் இல்லை என்றால் சிறிய படங்கள் கவனம் பெறாமல் போய்விடும்- சீனு ராமசாமி

Published On 2024-11-26 11:19 IST   |   Update On 2024-11-26 11:19:00 IST
  • Review கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும்.
  • படம் பார்த்தபின் விமர்சனங்களை படிப்பது என் வழக்கம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் கடந்த 14-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. 'கங்குவா' திரைப்படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே நடிகை ஜோதிகா படம் குறித்து விளக்கமான பதிவை வெளியிட்டு நெகடிங் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்பதிவு வைரலானதுடன், கவனத்தையும் பெற்றது.

இதையடுத்து FDFS Public Review/ Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தருமாறு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், விமர்சனம் இல்லை என்றால் சிறிய படங்கள் கவனம் பெறாமல் போய்விடும் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:- திரையரங்கு வாசலில் மக்களிடம் Review கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும். படம் பார்த்தபின் விமர்சனங்களை படிப்பது என் வழக்கம். இப்படத்தை நாம் பார்க்காத கோணத்தில் விமர்சகர் பார்த்துள்ளார் என ஆச்சரியப்படுவேன் என கூறியுள்ளார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News