சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி, பரத் நடித்த "வீரவணக்கம்" படம் ஆகஸ்ட் 29 ரிலீஸ்!

Published On 2025-08-16 19:16 IST   |   Update On 2025-08-16 19:16:00 IST
  • புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெற்றிருக்கிறது.
  • பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் "வீரவணக்கம்".

புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெற்றிருக்கிறது.

சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட்டது. அதில் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்ஷ்மி நடித்திருக்கிறார்.  இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 26 இல் திரைக்கு வர உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Tags:    

Similar News