சினிமா செய்திகள்

சல்மான்கானுக்கு இப்படி ஒரு நோயா?- ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2025-06-24 08:10 IST   |   Update On 2025-06-24 08:10:00 IST
  • 59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ‘முரட்டு சிங்கிள்' ஆக வலம் வருகிறார்.
  • தனது உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து முதல்முறையாக சல்மான்கான் பேசியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சல்மான் கான். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கட்டுடல் கொண்ட கதாநாயகனாகவும் வலம் வருகிறார்.

கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' என்ற படத்தில் சல்மான்கான் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சினிமா மட்டுமின்றி டி.வி.யில் இந்தி 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் 'முரட்டு சிங்கிள்' ஆக வலம் வருகிறார். சமீபகாலமாக உடல் சோர்வுடன் காணப்படும் சல்மான்கான், தனது உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது, ''டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற நோய் காரணமாக, எனது மூளையில் ரத்த நாள வீக்கம் பிரச்சனை இருக்கிறது. அதுமட்டுமின்றி ஏ.வி. மால்பார்மேஷன் என்ற பிரச்சனையும் எனக்கு இருக்கிறது. இத்தனை இருந்தும் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். எல்லாம் என் ரசிகர்களுக்காக...'', என்றார்.

சல்மான்கான் குறிப்பிட்ட டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற பிரச்சனையால் முகத்தில் அடிக்கடி கூர்மையான வலி ஏற்படும் என்பதும், இந்த நோயை மருத்துவ உலகில் 'தற்கொலை நோய்' என அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News