சினிமா செய்திகள்

கரு கரு கருப்பாயி.. கருப்பு உடையில் கவர்ச்சி.. வைரலாகும் சாக்ஷி அகர்வால் புகைப்படம்

Published On 2024-06-14 19:35 IST   |   Update On 2024-06-14 19:35:00 IST
  • ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் நடிகை சாக்க்ஷி தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
  • இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், சாக்ஷி அகர்வால். மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர். தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் முதலில் ஒரு நிறுவனத்தில் மார்கெட்டிங் துறையில் இருந்தார்.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய அளவில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா", தல அஜித்தின் "விசுவாசம்" மற்றும் ஆர்யாவின் "டெடி" உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால்.


இறுதியாக தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் "பகீரா" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.


இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கருப்பு உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

Tags:    

Similar News