விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்' படத்தின் திரைவிமர்சனம்!
கதைக்களம்
படத்தின் தொடக்கத்தில் ஒரு பழங்குடி பெண் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார். அவருக்கு பிறந்த குழந்தை தான் கதாநாயகன் விஜய் ஆண்டனி. அப்படியே வருடங்கள் ஓடி 2025-ல் கதைக்களம் நடக்கிறது.
விஜய் ஆண்டனி பல பேர் வீட்டில் கிடைத்த வேலையை செய்து விட்டு இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார். தற்போது விஜய் ஆண்டனி செகரட்ரி ஆபிஸில் ஒரு சிறு வேலை கிட்டதட்ட டீ வாங்கி தருவது போன்ற வேலையிலிருந்து ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்குகிறார்.
தமிழகத்தில் கவர்மெண்ட், தமிழக அரசியல் யாருக்கு எது வேண்டுமானாலும் போன் காலிலேயே முடித்து, அதற்கான கமிஷனை எடுத்துக்கொள்கிறார். இப்படி ஒரு சிஸ்டத்தை விஜய் ஆண்டனி உருவாக்கி வைத்துள்ளார். டிரான்ச்ஃபர், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது, என இவர் செய்ய முடியாத வேலையே இல்லை. அதை வைத்து ரூ 6000 கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறார்.
இப்படி நன்றாக சென்று கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் வாழ்க்கை ஒரு மத்திய அமைச்சருக்கு வேலைப்பார்த்து தரும்பொழுது மாட்டிக்கொள்கிறார். இந்த ஒரு பிரச்சனையால் இதற்கு முன் இவர் வேலைப்பார்த்த நபர்களுக்கும் சிக்கல் ஏற்பட அனைத்து தரப்பும் அவரை ரவுண்ட் கட்ட, இதிலிருந்து விஜய் ஆண்டனி எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
விஜய் ஆண்டனி இம்மாதிரி கதாப்பாத்திரத்தை நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களில் செம்மையாக நடித்திருப்பார். இக்கதாப்பாத்திரத்திற்கு தேவையான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வாகை சந்திரசேகர் சிறந்த தேர்வு, மிடுக்கான தோற்றத்தில் மிரட்டியுள்ளார்.
இயக்கம்
படத்தின் முதல் பாதி அனல் பறக்கும் திரைக்கதையால் நிரம்பியுள்ளது. இது படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒரு மீடியட்டர் பெரிய பெரிய MP, MLA-வால் கூட முடியாத விஷயத்தை எப்படி முடித்து வைக்கிறார் என்பதை காட்டிய விதம் பிரமிப்பு. ஆனால் அதனை இரண்டாம் பாதியில் கொடுக்க தவறி இருக்கிறார் இயக்குநர். லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். இரண்டாம் பாதியில் அதிகம் வசனங்களால் தினித்து இருப்பது சற்று சோர்வை கொடுக்கிறது.
ஒளிப்பதிவு
ஷெல்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இசை
விஜய் ஆண்டனியின் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
தயாரிப்பு
Vijay Antony Film Corporation நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்: 2/5