சினிமா செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனருக்கு திருமண பரிசாக BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர்

Published On 2025-10-28 18:01 IST   |   Update On 2025-10-28 18:01:00 IST
  • சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியானது.
  • இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார்.

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருப்பதால் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.

முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகமான அறிமுகமாகும் படத்தை டூரிஸ்ட் ஃபேமிலியின் இணை இயக்குநர் இயக்க உள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற 31-ந் தேதி அபிஷன் ஜீவின்ந்த்-க்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் தயாரிப்பாளர் திருமண பரிசாக BMW காரை பரிசளித்துள்ளார். 

Tags:    

Similar News