சினிமா செய்திகள்
null

அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு

Published On 2025-04-01 16:54 IST   |   Update On 2025-04-01 16:54:00 IST
  • ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் ஷர்மிளா தாபா
  • இவர் மீது தற்பொழுது காவல் அதிகாரிகள் FIR பதிவு செய்துள்ளனர்.

ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் அந்த புகழை வைத்து விஸ்வாசம் , வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஷர்மிளா தாபா. மேலும் இவர் சின்னத்திரையில் நடித்து வந்தார். விஜய்  தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இவர் மீது தற்பொழுது காவல் அதிகாரிகள் FIR பதிவு செய்துள்ளனர்.

நேபாளத்தை சேர்ந்த இவர் நடன் உதவி இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரியில் முறைகேடு இருப்பதாக கூறி வழக்கு பதிவு.  முதலில் இவர் இந்தியா பாஸ்போர்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் அவரது அண்ணாநகர் முகவரியை கொடுத்துள்ளார். தற்பொழுது மீண்டும் பாஸ்போர்ட் புதுபிக்கும் போது வியாசார்பாடியில் உள்ள முகவரியை கொடுத்ததால் இதில் முறைகேடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் மோசடி வழக்கை இவர் மீது அளித்துள்ளனர். அதனை விசாரித்த காவல் அதிகாரி நடிகை தாபா மீது 3 பிரிவுகளிலன் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Tags:    

Similar News