யூடியூப்பர்களின் பித்தலாட்டங்கள்- பகல் கனவு விமர்சனம்
- இன்றைய சூழலில் பல யூடியூப்பர்கள் கண்டென்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
- அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்பதை இயக்குனர் படமாக்கி இருக்கிறார்.
நாயகன் பைசல் ராஜ் தன் நண்பன் கராத்தே ராஜன், காதலி ஆதிரா சந்தோஷ் உதவியுடன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பைசல் ராஜ் தனது கண்டெண்ட் வைரலாக மந்திரவாதி உதவியுடன் காதலி ஆதிராவிற்கு பேய் பிடித்ததை ஓட்டியதாக ஒரு பதிவு போடுகிறார். அதை பார்த்த போட்டி யூடியூப்பர் ஒருவர் அந்த பதிவு பொய் என்று மறுப்பு தெரிவித்து பதிவு போடுகிறார்.
இதனால் பாதிப்படைந்த பைசல் ராஜ், பேய் வீடு பற்றி கண்டெண்ட் போட முடிவு செய்கிறார். அதற்கு தனியாக இருக்கும் வீட்டை தேடி கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் காவலாளியை சரி செய்து ஆதிரா சந்தோஷை பேயாக நடிக்க வைத்து வீடியோ போடுகிறார். அதை பார்த்த வீட்டு உரிமையாளர், அது பொய் என்று பேட்டி கொடுக்கிறார். இது ஆதிரா சந்தோஷின் குடும்பத்திற்கு தெரிய வர, அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்கின்றனர்.
பைசல் ராஜ், உண்மையாகவே பேய் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று கூல் சுரேஷிடம் சொல்கிறார். அதற்கு கூல் சுரேஷ் பேய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக சொல்கிறார்.
இறுதியில் இருவரும் பேய் இருக்கும் இடத்திற்கு சென்றார்களா…? பேய் பார்த்தார்களா? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பைசல்ராஜ் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
நாயகனாக நடித்து இருக்கும் பைசல்ராஜ், இப்படத்தை இயக்கி இருக்கிறார். யூடியூப்பர்களின் பித்தலாட்டங்களை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். இன்றைய சூழலில் பல யூடியூப்பர்கள் கண்டென்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்பதை படமாக்கி இருக்கிறார். யூக்கிக்கும் படியான காட்சிகள், சுவாரசியம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
ஜாய் ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்திற்கு அதிக தெளிவு இல்லாமல் இருக்கிறது.
இசை
சுரேஷ் நந்தனின் இசை மற்றும் பிண்ணனி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.