சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஜகதீஸ் அளவுக்கு யாரும் இதுவரை ஒத்துழைப்பு தந்ததில்லை - ஷேன் நிகாம்

Published On 2024-12-08 21:43 IST   |   Update On 2024-12-08 21:43:00 IST
  • , புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.
  • இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

 

SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "மெட்ராஸ்காரன்". விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.

ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்…

நடிகர் கலையரசன் பேசியதாவது…

இங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் எல்லாப்படத்திலும் உண்மையாக அர்ப்பணிப்போடு உழைப்போம், ரசிகர்கள் தரும் ஆதரவு தான் நாம் நடிகர்களாக வெற்றி பெறுகிறோம். தயாரிப்பாளர் ஜகதீஸ் நல்ல மனசுக்காரர், அவருக்காக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். ஷேன் டார்லிங், நிஹாரிகா சூப்பராக நடித்துள்ளனர். ஐஸு இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் செய்துள்ளார். டைரக்டர் வாலிக்கு நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் சின்சியராக உழைத்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

 

நடிகர் ஷேன் நிகாம் பேசியதாவது...

தயாரிப்பாளர் ஜகதீஸுக்கு நன்றி. மலையாளத்தில் நிறையத் தயாரிப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். ஆனால் யாரும் இவர் அளவு ஒத்துழைப்பு தந்ததில்லை நன்றி. சதீஷ் , என்னை ஆட வைத்ததற்கு நன்றி. நிஹாரிகா நல்ல ஒத்துழைப்பு தந்தார். வாலி மோகன் தாஸ் இந்தப்படம் தந்ததற்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகன் நான், என் முதல் தமிழ்ப்படம் இது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

ஷேன் நிகாம் தயாரிப்பாளரிடம் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆக்டர் இருப்பாரா எனத் தெரியவில்லை, நான் எப்போது கொஞ்சம் சோகமாக இருந்தாலும் உடனே உற்சாகப்படுத்துவார். இந்தப்படம் வந்த பிறகு தமிழில் மிக முக்கியமான நடிகராக இருப்பார். பல தடைகளைக் கடந்து தான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். இதே மவுண்ட் ரோட்டில் டீ வித்திருக்கிறேன். இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளேன். கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

https://iflicks.in/

Tags:    

Similar News