சினிமா செய்திகள்

#PuriSethupathi படத்தில் இணைந்த நிவேதா தாமஸ் & கன்னட பிரபலம்

Published On 2025-04-29 16:51 IST   |   Update On 2025-04-29 16:51:00 IST
  • தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத்.
  • பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்து அவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதை தொடர்து அடுத்ததாக பூரி ஜெகநாத் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நடிகை தபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இப்படத்தில் தற்பொழுது கன்னட முன்னணி நடிகரான துனியா விஜய் மற்றும் நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

துனியா விஜய் கடந்த ஆண்டு பீமா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நிவேதா தாமஸ் நடிப்பில் அண்மையில் 35 சின்ன விஹயம் இல்ல படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News