null
நாளை வெளியாகும் திரைப்படங்கள்- ரசிகர்களுக்கு சினிமா விருந்து!
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
சிவகார்த்திகேயன் நடிப்பில் "மதராஸி"
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன்-டிராமா கலந்த படைப்பு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொண்டுள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் "பேட் கேர்ள்" {Bad Girl}
வெற்றிமாறனின் பேனர் கீழ் உருவாகியிருக்கும் Bad Girl படத்தை வர்ஷா பரத் இயக்க அஞ்சலி சிவராமன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாலா நடித்த "காந்தி கண்ணாடி"
சின்னத்திரையில் தனக்கு என ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கலக்கு கலக்கிய பாலா தற்பொழுது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பாலாவின் புதிய முயற்சியாக உருவான இந்த படம், சமூக பிரச்சனைகள் மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அனுஷ்கா நடிப்பில் "காட்டி"
தனித்துவமான கதையம்சத்துடன் உருவான அனுஷ்காவின் படைப்பு, பெண்கள் மையமாக இருக்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமாகினார்.
"தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்"
பிரபல ஹாலிவுட் ஹாரர் பிராண்டின் புதிய பகுதி, ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி அனுபவத்தை வழங்க வருகிறது.
மொத்தம் 5 திரைப்படங்கள் ரசிகர்களை கவர தயாராக காத்திருக்கின்றன. ஆக்ஷன், டிராமா, ஹாரர் என பல்வேறு வகைகளில் வெளியாகும் இந்த படங்கள், பாக்ஸ் ஆபிஸ் விறுவிறுப்பை அதிகரிக்க இருக்கிறது.